NDA கூட்டணிக்கு வரவில்லை என்றால்… விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த தமிழிசை… சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்…!

Spread the love

பலமான அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதையை ஒழிப்பதற்காக பாதயாத்திரையை வைகோ தொடங்கியுள்ளார். அதனை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். போதையை உற்பத்தி செய்வது, விற்பது மற்றும் ஆதரிப்பது என எல்லாமே அவர்கள் தான் செய்கின்றனர். எனவே அறிவாலயத்தை நோக்கிதான் அவர்கள் பாதயாத்திரை செல்ல வேண்டும். திமுக கூட்டணியில் குழப்பம் ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸிலும் முக்கட்சி விவகாரம் தலை தூக்கி உள்ளது. தமிழக காங்கிரஸ்காரர்கள் அறிவாலயத்தின் அடிமைகளாக மாறிவிட்டனர்.

அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே அசுர சக்திகள். நாங்கள் அனுபவத்தில் பலமாக இருக்கின்றோம். விஜய் பலமாக இருப்பதாக அனுமானத்தில் கூறிக் கொண்டிருக்கின்றனர். அனுபவத்தில் பலமாக இருப்பவர்களுடன் அனுமானத்தில் பலமாக இருப்பவர்கள் வந்தால் நல்லது. வரவில்லை என்றால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. கூட்டணிக்கு வரவில்லை என்றால் அவருக்கு தான் பிரச்சனை என்று தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாகவே NDA கூட்டணியில் இணைய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

6 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

6 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago