கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், நடந்து சென்ற பெண்ணின் பையை மின்னல் வேகத்தில் பறித்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த அந்த நபர், ஒற்றைக் கையால் லாவகமாகப் பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
“>
இதனால் பாதிக்கப்பட்ட பெண் நிலைதடுமாறி விழுந்த போதிலும், அந்த நபர் அங்கிருந்து வேகமாக மறைந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற சமூக விரோதச் செயல்களைத் தடுக்க ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமியார், பெங்களூருவில் வசிக்கும் தனது மருமகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அவருக்குப் பிடித்தமான…
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, காவல்துறையினர் வெறும்…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…