சீனாவுக்கு பேரதிர்ச்சி…. 17,244 அடி உயரத்தில் இந்தியா செய்யப்போகும் வரலாற்று சம்பவம்….. இமயமலையில் உருவாகும் பிரம்மாண்டம்….!

By Nanthini on கார்த்திகை 7, 2026

Spread the love

இந்திய இமயமலைப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,244 அடி (5,256 மீட்டருக்கு மேல்) உயரத்தில் லடாக்கில் அமைக்கப்பட உள்ள புதிய ரயில் நிலையம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் தொடங்கி மணாலி வழியாக லடாக்கின் தலைநகரான லேவை இணைக்கும் வகையில் 489 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த புதிய வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.1.31 லட்சம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த பிரம்மாண்டத் திட்டத்தில், டாங்லாங் லா கணவாய் அருகே அமையவுள்ள ரயில் நிலையம் உலகின் மிக உயரமான ரயில் நிலையமாக உருவெடுக்கப் போகிறது.

தற்போது திபெத்தில் கடல் மட்டத்திலிருந்து 16,627 அடி (5,068 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ள சீனாவின் ‘டாங்குலா’ ரயில் நிலையமே உலகின் மிக உயரமான இடத்திலிருக்கும் ரயில் நிலையமாக உள்ளது. இந்தியாவின் இந்த புதிய லடாக் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, சீனாவின் சாதனையை முறியடித்து உலகிலேயே மிக உயரமான ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெறும். கடினமான நிலப்பரப்பு மற்றும் செங்குத்தான மலைப்பகுதிகளைக் கடந்து செல்லும் இந்த 489 கி.மீ பாதையில், சுமார் 270 கி.மீ தொலைவுக்குச் சுரங்கப் பாதைகளே அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

   

அதிக உயரத்தில் நிலவும் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் கடுமையான குளிரை எதிர்கொள்ளும் வகையில், பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் அழுத்தப்பட்ட மற்றும் வெப்பமூட்டப்பட்ட சிறப்பு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. காஷ்மீரின் வரலாற்றுச் சிறப்புமிக்க செனாப் பாலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் கடினமான மலைப்பாதை திட்டங்களைத் தொடர்ந்து, இந்திய ரயில்வேயின் பொறியியல் திறனுக்கு மகுடம் சூட்டும் சாதனையாக இந்த லடாக் ரயில் பாதை திட்டம் அமையவுள்ளது.

   

இத்திட்டம் வெறும் போக்குவரத்து வசதிக்காக மட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ள லடாக் பகுதிக்கு, எந்தவொரு கடுமையான காலநிலையிலும் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை மிக விரைவாகக் கொண்டு சேர்க்க இந்த ரயில் பாதை பெரிதும் உதவும். இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.