அடுத்தடுத்த ஷாக்…. 4000 கோடி மணல் ஊழல்…. அன்பில் மகேஷை தொடர்ந்து துரைமுருகனுக்கு விழுந்த அடி…. தமிழக அரசியலில் பெரும் புயல்….!

By Nanthini on கார்த்திகை 7, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு, சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு பிரம்மாண்ட ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உட்பட 28 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையில் ரூ.400 கோடி முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய விஜய் அரசின் இந்த அடுத்தகட்ட நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

அமலாக்கத்துறை நடத்திய விரிவான விசாரணையில், தமிழகத்தின் 28 ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட 196.37 ஹெக்டேர் பரப்பளவிற்கு பதிலாக, சுமார் 987.10 ஹெக்டேர் பரப்பளவில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது கண்டறியப்பட்டது. செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன்கள் மற்றும் ஜியோ ஸ்கேனிங் தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு செய்ததில், சுமார் 23.64 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டிருப்பதும், மணல் எடுத்துச் செல்ல போலி அனுமதிச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்கள் மற்றும் ‘அறப்போர் இயக்கம்’ சமர்ப்பித்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது விரிவான விசாரணை நடத்தி வருகிறது.

   

இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் தலைமை பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி உள்ளிட்ட 14 அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களான திண்டுக்கல் ரத்தினம், எஸ். ராமச்சந்திரன், கரிகாலன் உள்ளிட்ட 10 தனிநபர்கள் என மொத்தம் 28 பேர் மீது வழக்கு பாயந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், வேலூர் உள்ளிட்ட 34 முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இச்சோதனையின் முடிவில் 825 முக்கிய ஆவணங்கள், 11 டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறி சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதால் அரசு கருவூலத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது மட்டுமன்றி, மாநிலத்தின் ஆறுகளின் இயற்கை நீரோட்டம், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் ஈடுகட்ட முடியாத கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன. முக்கியப் புள்ளிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையும், வழக்குப்பதிவும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.