“கையேந்த பிடிக்கல.. 82 வயசுல 12 மணி நேர உழைப்பு…! மும்பை மன்சுக் காகாவின் மாஸ் கம்பேக்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!”

By Swetha on ஆனி 17, 2026

Spread the love

மும்பையைச் சேர்ந்த 82 வயதான மன்சுக் காகா என்ற முதியவரின் உழைப்பும், அவரது மனதை உருக்கும் வாழ்க்கை போராட்டமும் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆராதனா சாட்டர்ஜி என்ற இன்ஸ்டாகிராம் உள்ளடக்க உருவாக்குநர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மன்சுக் காகா பல வருடங்களாக ஒரு புடவைக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால் அவரது வேலை பறிபோனது. மேலும், அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மகனும் தனது வேலையை இழக்க நேரிட்டது.

நோயிலிருந்து குணமடைந்த பிறகு, யாரிடமும் கையேந்த விரும்பாத மன்சுக் காகா, தனது சுயமரியாதையைக் காத்துக்கொள்ள மீண்டும் உழைக்கத் தொடங்கினார். தனது வீட்டின் அருகே ஒரு சிறிய தள்ளுவண்டிக் கடையைத் தொடங்கி, காக்ரா, சக்லி, ஃபர்சான் போன்ற 20 வகையான வீட்டுத் தின்பண்டங்களை விற்கத் தொடங்கினார். இந்த பலகாரங்களை அவரது சகோதரி வீட்டில் அன்போடு தயாரித்துக் கொடுக்கிறார். தினமும் காலையிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை சுமார் 12 மணி நேரம் உழைக்கும் அவர், நாள் ஒன்றுக்கு வெறும் 300 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார்.

   

https://www.instagram.com/reel/DZmuIoWPZNx/?utm_source=ig_web_button_share_sheet

   

இந்த வயதிலும் மன்சுக் காகா எப்போதும் தூய்மையான சட்டை அணிந்து, வாடிக்கையாளர்களிடம் மிகுந்த மரியாதையுடனும் கனிவுடனும் நடந்துகொள்வது பலரைக் கவர்ந்துள்ளது. தனது சிறிய வருமானத்தைக் கூட ஒரு டைரியில் பைசா விடாமல் கணக்கெழுதி வைக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட ஆராதனா, அந்தப் பகுதி வழியாகச் செல்பவர்கள் மன்சுக் காகாவிடம் தின்பண்டங்களை வாங்கி ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தேவைப்படுபவர்களுக்குப் பணம் கொடுத்து உதவுவதை விட, அவர்களின் உழைப்பையும் திறமையையும் விலைக்கு வாங்குவதே அவர்களின் சுயமரியாதையைக் காக்கும் சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.