ஏண்டா ஒரு நியாயம் இல்லையா.. 300 ரூபாய்க்காக தொழிலாளி கொலை.. குடிபோதையில் 2 பேர் செய்த கொடூரம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 11, 2025

Spread the love

பெங்களூரு, பல்லாரி மாவட்டம் ஏ.சி.எம்.சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் முகமது ஆசிப். கடந்த ஐந்தாம் தேதி இவருடைய வீட்டிற்கு பின்னால் ஒருவர் தலைநசிங்கபடி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் வந்த போலீசார் இவர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சந்தேகத்தின் பெயரில் பால்ராஜ், அனுமந்த் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் தெரியவந்தது கடந்த 4ஆம் தேதி இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர், மேலும் மது வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டு உள்ளது. தெருவில் போற வருபவர்களிடம் பணம் கேட்டு உள்ளார்கள் யாரும் தராததால், அந்தப் பகுதியை சுற்றி வந்துள்ளார்கள். அந்த பக்கமாக போய்க்கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் கல்லை போட்டுக் கொன்றுவிட்டு  ரூ.300 கொள்ளை அடித்தது தெரியவந்தது. வெறும் 300 ரூபாய்க்கு கொலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.