அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை… எதிர்காலத்தில் எதுவேணாலும் நடக்கலாம்… ஓபிஎஸ் அதிரடி..!!!

By Soundarya on புரட்டாதி 11, 2025

Spread the love

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், “அதிமுக ஒன்றிணை வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எப்படிப்பட்ட முயற்சிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை முழு மனதோடு வரவேற்கிறேன். அதற்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பேன். அதிமுக ஒன்றிணைந்தால் தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது எனக்கும் அவருடைய கருத்து ஒன்றிணைந்தால் தான் ஜெயலலிதா, எம்ஜிஆர் எண்ணம் நிறைவேறும்.

இதில் மாறுபட்டு இருப்பதற்கான காரணம் என்னவென்று இபிஎஸ் இடம் தான் கேட்க வேண்டும். அவரை தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் மீண்டும் கூட்டணிக்கு வருவேன் என்று டிடிவி கூறி இருப்பது ஆழமான கருத்து. என்னை பொறுத்தவரை கட்சி ஒன்றிணைவதற்கு எந்தவித டிமாண்டும் வைக்கவில்லை. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.