அட கொடுமையே… தூக்கக் கலக்கத்தால் வந்த வினை… தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி… தொழிலாளி கொடூர பலி…!!

By Swetha on ஆடி 22, 2026

Spread the love

விசாகப்பட்டினத்தின் அக்யையபாலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சோகமான சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து பொருட்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது, வேகமாக வந்த ரெடி மிக்ஸ் கான்கிரீட் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.

பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்களில், ஒருவர் லாரி மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி தீவிர காயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

   

https://twitter.com/VizagNewsman/status/2079764483522867247/video/1

   

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், லாரி ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முதலில் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தின் சுவரில் மோதி, அதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் வாகனத்தின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியதாகப் போலீசார் தெரிவித்தனர்.