“அவள் என்னுடைய கள்ளக்காதலி” எனக்கு தான் சொந்தம்…. சண்டையிட்ட தொழிலாளிகள்… கடைசியில் நேர்ந்த பயங்கரம்..!!

By Soundarya on ஆடி 1, 2025

Spread the love

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சபரீஷ்வரன். 35 வயது ஆன இவர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து தாயார் மற்றும் பாட்டியோடு வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சபரீஷ்வரன் கதவு இல்லாத வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். பக்கத்து வீட்டில் அவருடைய தாயார் மட்டும் பாட்டி தூங்கி உள்ளார்கள். இந்த நிலையில் காலையில் எழுந்து பார்த்த போது சபரிஸ்வரன் கழுத்து உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இதை பார்த்து அவருடைய பாட்டியும், தாயாரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சபரீஷ்வரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதே பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பால் என்ற பாலமுருகனும் வசித்து வந்துள்ளார்.

   

இவர் மரம் வெட்டும் வேலை செய்கிறார். இவரும் சபரீஸ்வரன் தொடர்பு வைத்த பெண்ணோடு தகாத உறவு வைத்திருந்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பாலமுருகன், சபரீஸ்வரன் இருவரும் சண்டையிட்டுள்ளார்கள்.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து சபரீஸ்வரன் கதவு இல்லாத வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் பாலமுருகன் மது போதையில் வந்து தூங்கிக் கொண்டிருந்த சபரேஸ்வரனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனையடுத்து கொலையாளி பாலமுருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்ய  4தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகிறார்கள்.