“அந்த அங்கிள் என்கிட்ட வந்து…” நண்பர்களிடம் சிறுவன் சொன்ன வார்த்தை… நட்பாக பேசி கூலி தொழிலாளி செய்த காரியம்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 30 வயது கூலித் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண் (30) என்ற தொழிற்சாலை தொழிலாளி, அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவனிடம் ஆரம்பத்தில் நட்பாகப் பழகி விளையாடி வந்துள்ளான். நாளடைவில் மாணவனிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டுப் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன சிறுவன் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளான்.

   

சிறுவனின் அமைதியைப் பயன்படுத்தி அருண் தொடர்ந்து எல்லை மீறிய நிலையில், மாணவன் தன் பள்ளி நண்பர்களிடம் இது குறித்துக் கூறியுள்ளான். நண்பர்கள் உடனடியாகத் தலைமையாசிரியரிடம் தெரிவிக்க, அவர் குழந்தைகள் நலக் குழுவிற்கும் மத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். குழந்தைகள் நல அதிகாரிகளின் விசாரணையைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருணைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவனுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.