ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது!… வசமாக மாட்டிய TDP எம்.எல்.ஏ… பதுங்கிய போலி வாக்காளர்கள்… ரகசிய திட்டம் அம்பலம்… வெடித்த பயங்கர வாக்குவாதம்…!!

By Gayathri on கார்த்திகை 5, 2026

Spread the love

சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட திருப்பதி சாய் நகர் பகுதியில், தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ புலிவர்த்தி நானி போலி வாக்காளர்களைத் திரட்டி பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த தகவலையடுத்து, ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி அதிரடி களஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த பல போலி வாக்காளர்களை அவர் கையும் களவுமாகப் பிடித்து, உடனடியாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

போலி வாக்காளர்கள் பிடிபட்ட தகவல் பரவியதும், டிடிபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்து செவி ரெட்டியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதோடு, டிடிபி முகாமில் பெரும் சலசலப்பும் கலக்கமும் உருவானது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து சட்டவிரோதமாக நபர்களைக் குவித்து வைத்திருப்பது அம்பலமானதால், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட காரசாரமான மோதலைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.