மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் 1.31 கோடி பெண்களில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் சுமார் 19.65 லட்சம் பேர் (15 சதவீதம்) உள்ளனர்.
இவர்களை முதியோர் நலத் திட்டத்திற்கு மாற்றி, தற்போதைய தொகையை விட கூடுதலாக மாதம் 3,000 ரூபாய் வழங்கினால் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை எவ்வளவு ஏற்படும் என்பது குறித்தும், அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
