மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்துவது தொடர்பாக, இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வரவிருக்கும் பட்ஜெட்டிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், தற்போதைய மாநில நிதிநிலைமை இத்தகைய கூடுதல் சுமையை உடனடியாகத் தாங்காது என்பதால், இந்த ஆண்டு இத்திட்டம் அமலுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டிற்கான (2026-2027) மாநில நிதிநில அறிக்கையில்தான் இடம்பெறும் எனப் பிரபல செய்தித் தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
