அதிர்ச்சி…! காதலனை வெட்டி டிரம்மில் போட்ட காதலி… பூட்டிய வீட்டின் குளியலறையில்… வெளிவந்த பகீர் உண்மை…!மும்பையில் பரபரப்பு…!!

By Swetha on ஆடி 20, 2026

Spread the love

மும்பை அருகே உள்ள கல்யாண் நீல்காந்த் சொசைட்டியில் நேகா என்ற பெண் தனது காதலனுடன் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்தார். சில நாட்களாக அந்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பக்கத்து வீட்டார்கள் வீட்டு உரிமையாளருக்குக் குரல் பதிவு மூலம் தகவல் தெரிவித்தனர். அதில், குளியலறையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாகவும், அவர் மீது தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கதவைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. குளியலறையில் உள்ள ஒரு டிரம்மில், பல துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. உடல் சீக்கிரமாக அழுக வேண்டும் என்ற நோக்கில் அதன் மீது தொடர்ந்து தண்ணீர் விழுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. உடற்பகுதிகளை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

   

அண்மையில் புனேயில் ஷியா அகர்வால் என்ற பெண் தன் வருங்கால கணவனை மலையிலிருந்து தள்ளிக் கொன்ற சம்பவம் அடங்குவதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இக்கொலை எதனால் நடந்தது என்பது குறித்துப் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலையைச் செய்த நேகா கொல்கத்தாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைக் கைது செய்யத் தனிப்படை காவல்துறையினர் தற்போது கொல்கத்தாவிற்கு விரைந்துள்ளனர்.