ஒரே வீட்டில் 2 ரேஷன் கார்டா?… இனி இவங்களுக்கு ரூ.2,500 கிடையாது?… உரிமைத்தொகை திட்டத்தில் வரப்போகும் புதிய விதிகளும்… ரகசிய ஆய்வுகளும்.. ஷாக் நியூஸ்….!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கு முன்பாக, தகுதியான பயனாளிகளை முறைப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வரும் பெண்களின் விவரங்கள் தீவிரமாக மறுஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரே குடும்பத்தில் அல்லது ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறைகேடாக உரிமைத்தொகை பெறுவது போன்ற புகார்கள் குறித்து அதிகாரிகள் கள ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இவற்றுடன், தகுதியான ஏழை எளிய பெண்களுக்கு மட்டுமே இந்த நிதி உதவி முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், பயனாளிகள் தேர்வில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய விதிமுறைகளைச் சேர்ப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.