போடு ரகிட ரகிட…. இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000… தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on பங்குனி 11, 2026

Spread the love

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலித்ததில், தகுதியுள்ள பல லட்சம் பயனாளிகளுக்கு இந்த மாதம் ₹5,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட உள்ளது என்ற செய்தி பல குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக தகுதியுள்ளோரின் இறுதிப் பட்டியலை அரசு திரட்டி முடித்துள்ள நிலையில், தற்போது உதவித்தொகை பெற்று வரும் 1.31 கோடி பயனாளர்களுடன் கூடுதலாக சுமார் 4 முதல் 5 லட்சம் பேர் வரை இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் இந்தத் துரித நடவடிக்கையானது, முறையான விண்ணப்பங்கள் அளித்தும் விடுபட்ட தகுதியான பெண்களுக்கு நிதி உதவியைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.