“உனக்கு 35.. எனக்கு 27!”..”என் கூட வந்துடு.. இல்லன்னா செத்துடு!”… காதலன் செய்த கொடூர காரியம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!

By Muthu Mani on பங்குனி 11, 2026

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் என்பவர், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குப் பந்தல், மைக் செட் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். தொழிலுக்காக அவர் அடிக்கடி வெளியூர் சென்று வந்த நிலையில், அவரது 35 வயது மனைவிக்கும் அதே ஊரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் வசந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. வசந்திற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வயது வித்தியாசத்தினால் ஆரம்பத்தில் யாரும் இதைத் தவறாகக் கருதவில்லை என்றாலும், நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இவர்களது பழக்கம் குறித்து ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் கண்டித்தும், இருவரும் தங்களது உறவைக் கைவிடவில்லை. இதனால் மனமுடைந்த பலராமன் தனது நான்கு பெண் குழந்தைகளுடன் மனைவியைப் பிரிந்து தனியாகச் சென்றுவிட்டார். இதற்கிடையே, வசந்த் மற்றும் அந்தப் பெண் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். கடந்த மார்ச் 5-ம் தேதி இருவரும் சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

   

வாக்குவாதத்தின் போது அந்தப் பெண், “உன்னால்தான் என் கணவர் மற்றும் குழந்தைகளை நான் பிரிந்து வாழ்கிறேன். ஆனால் நீ மட்டும் உன் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய். எனவே, உனது குடும்பத்தைப் பிரிந்து என்னுடன் வந்துவிடு, இல்லையென்றால் என்னை விட்டுவிடு” என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு மற்றும் கைகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் ஓடி வருவதற்குள் வசந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

   

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீட்ட அப்பகுதியினர், கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய வசந்தைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திருமணத்தை மீறிய இந்த உறவும், அதன் விளைவாக ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவமும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.