புது முயற்சி..! ‘ஹலோ கிட்டி’ பொம்மைகளா?… பெண்களுக்கென பிரத்யேக மதுபான கவுண்டர்… நெட்டிசன்களைக் கவர்ந்த க்யூட் அலங்காரம்…!!

By Gayathri on ஐப்பசி 25, 2026

Spread the love

தலைநகர் டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையில், பெண் வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தொடங்கப்பட்டுள்ள தனி கவுண்டர் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த விற்பனைப் பகுதியில், வழக்கமான தோற்றத்திற்கு மாறாக இளஞ்சிவப்பு நிற அலங்காரங்கள், ‘ஹலோ கிட்டி’ கார்ட்டூன் ஸ்டிக்கர்கள் மற்றும் பஞ்சுப் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விநோதமான மற்றும் வித்தியாசமான அலங்காரம் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

பொது இடங்களில் மது வாங்கும்போது பெண்கள் எதிர்கொள்ளும் நெரிசல் மற்றும் அசௌகரியங்களைத் தவிர்த்து, அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நீண்ட வரிசைகளில் நிற்கத் தேவையில்லாமல் பெண்களுக்கென தனி இடம் ஏற்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது என்றும், அதே சமயம் கார்ட்டூன் பொம்மைகளுடன் கூடிய அலங்காரம் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.