“ரீல்ஸ் ஆட்சிக்கு முடிவுக்காலம்.. 6 மாசம் கூட தாங்காது”…. உண்மையான தீயசக்தி யாருனு தெரியப்போகுது…. தவெக அரசுக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்…..!

By Nanthini on ஐப்பசி 25, 2026

Spread the love

திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் தவெக ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். விலைவாசி உயர்வு, நிர்வாகக் கோளாறுகள் ஒருபுறம் இருக்க, பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறினார். மேலும், மின்வெட்டு, அரிவாள் கலாச்சாரம் மற்றும் தொடரும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் குறித்துக் கவலை தெரிவித்த அவர், இது மக்களின் நலனைப் புறக்கணிக்கும் ஒரு ‘ரீல்ஸ் ஆட்சியாக’ மாறிவிட்டதாக கடுமையாக விமர்சித்தார்.

   

போதைப்பொருள் நடமாட்டம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்புக் கட்டமைப்பைப் பாதுகாக்கவே இன்னொரு படை உருவாக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த ஆட்சிக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களும்கூட இன்று தாங்கள் செய்த தவறை நினைத்து புலம்பி வருவதாக அவர் தெரிவித்தார்.

   

உண்மையான தீயசக்தி யார் என்பதை மக்கள் தற்போது தெளிவாகப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இதுவெனக் கூறிய அவர், பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த அரசை விரைவில் அப்புறப்படுத்தத் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இக்கூட்டம் மற்றும் அவரது இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.