உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி மாற்றம்…. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்வு உறுதி?… மகளிருக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்….!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் மாதம் ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், எளிய மற்றும் நடுத்தர குடும்பப் பெண்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக ரூ. 1,500, அதிமுக ரூ. 2,000 மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ரூ. 2,500 வரை உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதிகளை அளித்திருந்தன. இந்த நிலையில் தவெக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, வாக்குறுதியளித்தபடி ரூ. 2,500 உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்று பயனாளிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்களிலும் வழக்கமான ரூ. 1,000 மட்டுமே வரவு வைக்கப்பட்டதால், இதுகுறித்து எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலும் பொதுவெளியிலும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கும் தீர்வு காணும் வகையில், மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்த தீவிர ஆலோசனையில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டுள்ளார். தங்களின் முதன்மை வாக்குறுதியான ரூ. 2,500 உரிமைத் தொகையை விரைவாக அமல்படுத்துவது குறித்து நிதியமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் திட்டவட்டமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

   

இந்நிலையில் வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் அமோக ஆதரவு கிடைக்கும் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த இரண்டு மாதங்களுக்குப் புதிய விண்ணப்பங்களைப் பெற அரசுத் தரப்பில் தீவிரமாகத் திட்டமிடப்பட்டு வருகிறது.