இரவில் திடீர் அறிவிப்பு…. புனித ஜார்ஜ் கோட்டையை விட்டு வெளியேறும் CM விஜய்?…. அலறும் தலைமைச் செயலகம்….!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முதன்மை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் அலுவலகம், நிர்வாக வசதி மற்றும் இட நெருக்கடி காரணமாக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சரின் முதன்மை அறைகள், செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அலுவலகங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படும் வகையில் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மாற்றத்தை முன்னிட்டு, 10-வது தளத்தில் இயங்கிவந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் பல்வேறு பிரிவுகள் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கும், சுற்றுலாத்துறையின் எழுதுபொருட்கள் அறை அத்துறை அமைந்துள்ள 9-வது தளத்திற்கும் தற்காலிகமாக மாற்றப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த செய்திகள் வெளியான நிலையில், தற்சமயம் அரசு பிறப்பித்துள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின் மூலம் அலுவலக இடமாற்றப் பணிகளைப் பொதுப்பணித்துறை முடுக்கிவிட்டுள்ளது.