“பட்ஜெட்டில் செம சர்ப்ரைஸ்”…. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. CM விஜய் ஆலோசனை….!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்தியதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைச் சாத்தியமான வழிகளில் உடனே செயல்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடுமாறு அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, தகுதிவாய்ந்த பெண்களுக்கான இந்த மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் நிதி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள், வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.