மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உரிமைத் தொகையை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிரடி அறிவிப்பை, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் வரும் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் வெளியிடுவார் என தனியார் இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை இரண்டு முறை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ₹1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தனது பிறந்தநாள் பரிசாக இந்தத் தொகையை ரூ..2,500 ஆக உயர்த்த முதல்வர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த முக்கிய அறிவிப்பு, ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும், குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
