1.86 கோடி பேர்.. களமிறங்கும் மகளிர் படை… 2026 தேர்தலுக்கு முதல்வர் கொடுத்த மெகா அசைன்மென்ட்…!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

பிப்ரவரி 11, 2026 அன்று நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில், வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதை இலக்காக முதல்வர் நிர்ணயித்துள்ளார். குறிப்பாக, திமுகவின் கோட்டையாகத் தமிழகத்தை நிலைநிறுத்த மகளிர் அணியினரின் பங்கு மிக முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக மகளிர் அணியினர் விரைவில் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று தீவிரப் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அரசின் திட்டங்களால் பயன்பெற்ற 1.86 கோடிக்கும் அதிகமான மக்களை, குறிப்பாகக் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ பெற்ற பெண்களை இவர்கள் நேரடியாகச் சந்திப்பார்கள்.

இதுவரை திமுகவிற்கு வாக்களிக்காத குடும்பங்களைக் கண்டறிந்து, அரசின் சாதனைகளை விளக்கி அவர்களின் வாக்குகளையும் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், பூத் அளவில் மகளிர் அணியினர் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், 234 தொகுதிகளிலும் ‘ஸ்டாலினே வேட்பாளர்’ என்ற எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் முதல்வர் கட்டளையிட்டுள்ளார்.