பகீர்..! கையில் ஆணி பதித்த குச்சிகளுடன் ரோட்டில் நிற்கும் பெண்கள்… மிரண்டு ஓடும் லாரி ஓட்டுநர்கள்… என்ன காரணம்..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த காணொளியில், இரண்டு பெண்கள் கையில் ஆணி பதித்த குச்சிகளுடன் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்கும் அதிர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சாலையின் நடுவே வாகனங்களை வழிமறிக்கும் இவர்கள், ஓட்டுநர்களை அச்சுறுத்தி சட்டவிரோதமாக வசூல் செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பயனர், சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் சுட்டிக்காட்டி, இதற்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், வீடியோவில் உள்ள ஒரு லாரியின் பதிவு எண் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இதுவரை 4.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த காணொளி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உடனடியாகத் தலையிட்டு இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.