இணையத்தை உலுக்கும் மர்மத்தேடல்… யார் இந்த பெண்…? திருஷ்டிக்காக தொங்கவிடப்படும் விசித்திரமான போட்டோ… கூகுள் லென்ஸுக்கே சவால்..!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

பெங்களூருவில் வசிக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவரின் சாதாரணப் பயணம், தற்போது இணையத்தையே உலுக்கும் ஒரு மர்மத் தேடலாக மாறியுள்ளது. கர்நாடகா முழுவதும் உள்ள கட்டுமான இடங்களைக் கடந்து செல்லும்போது, அங்கிருக்கும் முடிக்கப்படாத கட்டிடங்களில் ஒரு விசித்திரமான பெண்ணின் சுவரொட்டி மீண்டும் மீண்டும் இடம்பெறுவதை அவர் கவனித்தார். சேலை அணிந்து, அகன்ற கண்கள் மற்றும் ஆச்சரியமான முகபாவனையுடன் இருக்கும் அந்தப் பெண்ணின் படம் ஏன் அங்கு தொங்கவிடப்பட்டுள்ளது என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. கூகுள் லென்ஸ் மூலமாக அந்தப் பெண்ணைப் பற்றி அறிய முயன்றும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.

இறுதியாக, ஜனவரி 5, 2026 அன்று, அவர் இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டார். கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு கட்டுமானத் தளங்களில் இந்தப் படம் தொடர்ச்சியாகத் தென்படுவதாகவும், இதன் பின்னணி என்னவென்று புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி, குறுகிய காலத்தில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பொதுவாக இது போன்ற படங்கள் கட்டுமானத் தளங்களில் ‘திருஷ்டி’ கழிக்கவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுவதாகப் பல பயனர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், அந்த குறிப்பிட்ட பெண்ணின் புகைப்படம் குறித்த விவாதம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.