விடிஞ்சா திருமணம், குளியல் அறைக்குச் சென்ற மணப்பெண்… கதவை திறந்து பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அடுத்த சிந்தலப்பட்டடை கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவருடைய மனைவி வனிதா. இந்த தம்பதிகளுக்கு சந்தியா (21) என்ற மகள் உள்ள நிலையில் இவர் பி.காம் படித்து வந்துள்ளார். தற்போது இவர்கள் திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் வசித்து வருகின்றன. இதனிடையே சந்தியாவுக்கும் பள்ளிப்பட்டு அருகே உள்ள பாரதி நகர் பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இன்று அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த கிராமத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக சந்தியாவின் குடும்பத்தினர் இரண்டு நாட்களுக்கு முன்பு மணமகன் வீட்டுக்கு வந்துள்ளனர். இப்படியான நிலையில் நேற்று காலை சந்தியா குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சந்தியா மயங்கி நிலையில் கீழே கிடந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட இரு வீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குளியலறைக்கு சென்ற சந்தியா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

7 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

7 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

8 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

8 மணத்தியாலங்கள் ago