“ஐயோ…கேட்கும் போதே பதறுதே…” மழைநீர் வடிகால்வாயில் பெண் சடலம் மீட்பு… போலீசாரின் அதிர்ச்சி ரிப்போர்ட்…..!

Spread the love

தமிழ்நாட்டில் மழை காலம் நெருங்குவதையொட்டி சில பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை பாதுகாப்பான முறையில் மூட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுத்திருந்த நிலையில், சில இடங்களில் அவை முறையாக மூடப்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அரும்பாக்கம் வீரபாண்டி தெருவில் உள்ள மூடப்படாத மழைநீர் வடிகாலில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரிக்கையில், சடலமாக மீட்கப்பட்டவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த தீபா (42) என்பது தெரியவந்தது. இவர் மூடப்படாமல் இருந்தால் மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து, தலை மற்றும் முகத்தில் அடிப்பட்டு, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தீபாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்புக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே அதிகாரிகளின் அலட்சியமே பெண்ணின் இறப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் மின்விளக்கு எரியாததால் பள்ளம் தெரியாமல், தீபா தவறி விழுந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் தீபாவின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், பள்ளத்தில் விழுந்து நெற்றி பொட்டில் காயம் ஏற்பட்டதால், தீபா இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நள்ளிரவு 12:30 மணிக்கு பள்ளத்தில் விழுந்து, சுமார் 1 மணி அளவில் உயிர் விட்டார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Srimathi

Recent Posts

“காதல் பலி..”நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்.. ஒரு தவறான மெசேஜால் பறிபோன இரண்டு இளம் உயிர்கள்!

சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…

44 seconds ago

சென்னைக்கு ‘சூப்பர்-6’ ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்…! மினி பஸ் முதல் ஐடி வேலை வரை…. திமுகவின் மெகா தேர்தல் பிளான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…

4 minutes ago

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே”… இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா….. கண்ணீர் வரவழைக்கும் ஏமோனஷனல் வீடியோ..!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…

5 minutes ago

“விஜய்யின் வெற்றிக்கு ஸ்கெட்ச்?”… தளபதி போட்டியிடும் இடத்தில் ‘நோட்டா’?….. தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த நோட்டீஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…

14 minutes ago

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

19 minutes ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

25 minutes ago