அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

By Swetha on புரட்டாதி 14, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப் பிராணி ஒன்றைக் கொண்டு செல்வது தொடர்பாக இரு பெண்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளி ஆசிரியையான ஹீனா பாரி என்பவர் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியபோது, ஷ்வேதா சுபே என்பவர் தனது செல்லப் பிராணியான நாயுடன் லிஃப்ட்டில் இருந்துள்ளார். ஷ்வேதா மற்ற குடியிருப்பாளர்களை லிஃப்ட்டிற்குள் வரவிடாமல் தடுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஹீனா வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயன்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

   

இந்த வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியதில், ஷ்வேதா தான் வைத்திருந்த மரத்தடியால் ஆசிரியரைத் தாக்கியதோடு, அவரை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்துள்ளார். பதிலுக்கு ஆசிரியரும் அவரைத் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் நந்த்கிராம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.