தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில் உறைந்துபோன அந்த நபரின் விசித்திரமான எதிர்வினை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பயணி அமைதியாக நின்றுகொண்டிருந்தபோது, எங்கிருந்தோ பறந்துவந்த வௌவால் ஒன்று அவரின் தோள்பட்டையைப் பிடித்துக்கொண்டு அசையாமல் இருந்தது. பதற்றமடைந்த போதிலும், அதை விரட்டவோ அல்லது நகடவோ பயந்து, அவர் சில வினாடிகள் சிலை போல் உறைந்துபோய் நின்றார்.
https://www.instagram.com/reel/DdO4x-esse7/?utm_source=ig_web_button_share_sheet
இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோவிற்குப் பலரும் நகைச்சுவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “பேட்மேன் உங்களை பிடித்துவிட்டார்” என்றும், நிஜ வாழ்வின் சுவாரசியமான தருணம் இதுவென்றும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
