இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலம், புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்ற இளைஞருக்கும், சியா கோயல் (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக் கூறி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு சியா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடன் இணைந்து, திட்டமிட்டபடி கேத்தனை கோட்டையின் உச்சியிலிருந்து பள்ளத்தில் தள்ளி சியா கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை வழக்கு குறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சியாவின் மொபைல் பிரௌசிங் ஹிஸ்டரியை (Browsing History) ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு மேகாலயாவில் நடந்த புகழ்பெற்ற ‘ராஜா ரகுவன்ஷி தேனிலவுக் கொலை வழக்கு’ குறித்து சியா இணையத்தில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அந்த வழக்கில் சோனம் என்ற பெண் தன் கணவரைக் கொலை செய்திருந்தார். சோனம் செய்த தவறுகளைத் தான் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே, சியா இந்த கொலை வழக்கை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இணையத்தில் தேடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, “பெண்களைக் கைது செய்தால் போலீஸார் அடிப்பார்களா?” என்றும், “பெண் கைதிகளுக்கான சட்டப்பூர்வ உரிமைகள் என்னென்ன?” என்றும் சியா கூகுளில் தேடித் தெரிந்துகொண்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதற்கிடையில், சியாவின் வீட்டிலிருந்து மற்றொரு மொபைல் ஃபோனையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொலைத் திட்டம் குறித்து அதில் ஏதேனும் கூடுதல் தகவல்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய, அந்த மொபைல் தற்போது தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…