“மாந்திரீக பயிற்சி…” கணவரின் கொன்று குடலை எடுத்து பையில் போட்ட பெண்…. நேரில் பார்த்து மிரண்ட ஓனர்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

By Devi Ramu on ஆவணி 24, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இருவரும் வாடகை வீட்டின் மாடியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த சத்தம் கேட்டு, வீட்டின் உரிமையாளர் ரிங்கு மேலே சென்று பார்த்துள்ளார். அங்கு ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். மேலும், அவரது மனைவி விமலா, கணவனின் வயிற்றில் இருந்து வெளியே வந்த குடலை ஒரு பையில் அடைத்துக் கொண்டிருந்ததை பார்த்து உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

அவரைப் பார்த்ததும் பீதியடைந்த விமலா, மாடியிலிருந்து கீழே குதித்துத் தப்ப முயன்றதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 கத்திகளைக் கைப்பற்றினர். ராஜேஷின் வயிற்றில் 35 செ.மீ ஆழத்திற்குப் பலத்த கத்திக் குத்துக்காயம் ஏற்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. விமலா மாந்திரீகப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ள நிலையில், இக்கொடூரக் கொலையின் பின்னணியில் உள்ள காரணம் குறித்துப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.