சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவர் பத்மா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் தங்கம் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி உள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவும் தங்கம் மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பத்மா தூங்கிக் கொண்டிருந்த தங்கத்தின் தலையில் குளவி கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பத்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
