“இப்போ நான் எப்படி போவேன்…” 1 கி.மீ தூரத்தில் நின்ற பேருந்து…. வாக்குவாதம் செய்த பெண்…. மிரட்டல் தோணியில் பேசிய ஓட்டுனர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 29, 2026

Spread the love

இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றில், பெண் பயணிக்கும் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாத வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்ப பெண் இறங்க வேண்டிய குறிப்பிட்ட நிறுத்தத்திற்குப் பதிலாக சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் பேருந்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணியும், ஓட்டுநரும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது இரு தரப்பினரும் தரக்குறைவான மற்றும் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டிப் பேசிக் கொண்டுள்ளனர். மேலும், ஓட்டுநர் தரப்பில் மிரட்டல் தோணியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

   

பேருந்தில் மற்ற பயணிகளும் இருந்த நிலையில், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது ஓட்டுநர்களும் பயணிகளும் கண்ணியத்துடனும் அமைதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், ஏதேனும் புகார்கள் இருந்தால் உரிய முறையில் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.