பொதுவாக வீடுகளில் ஆடைகளைத் துவைக்கப் பயன்படும் வாஷிங் மெஷினை (துணி துவைக்கும் இயந்திரம்), ஒரு பெண்மணி பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்திய விசித்திரமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராமில் என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்ட இந்த வீடியோவில், சமையலறையில் இருக்கும் அழுக்கான பாத்திரங்களை அந்தப் பெண் ஒவ்வொன்றாக எடுத்து வாஷிங் மெஷினுக்குள் போடுகிறார். பார்ப்பவர்கள் ஆரம்பத்தில் இதை ஏதோ விளையாட்டு என்று நினைத்தாலும், அடுத்த கணமே அவர் அதில் துணி துவைக்கும் டிடர்ஜென்ட் தூளைப் போட்டு, மூடியை மூடி இயந்திரத்தை ஆன் செய்கிறார்.
இயந்திரம் இயங்கத் தொடங்கியதும் துணிகள் சுழல்வதைப் போல பாத்திரங்களும் உள்ளே வேகமாகச் சுழல ஆரம்பிக்கின்றன. அந்தப் பெண்மணி ஏதோ தினசரி செய்யும் வேலை என்பதைப் போல மிகுந்த தன்னம்பிக்கையுடன் இந்தச் செயலைச் செய்கிறார். மணி கணக்கில் செய்ய வேண்டிய வேலையை சில நிமிடங்களில் முடிக்கும் இந்த விசித்திரமான ஐடியாவைக் கண்டு சமூக வலைத்தளவாசிகள் வியப்படைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கருத்துகளுடன் வேகமாகப் பரவி வருகிறது.
https://www.instagram.com/reel/DYgp0mBg7Ex/?utm_source=ig_web_copy_link
இருப்பினும், இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள் தங்களது கவலைகளையும் எச்சரிக்கைகளையும் தெரிவித்துள்ளனர். இரும்பு மற்றும் எஃகு பாத்திரங்களை வாஷிங் மெஷினில் போடுவதால் அதன் உட்பகுதியும் டிரம்மும் சேதமடையக்கூடும் என்றும், பாத்திரங்களில் உள்ள எண்ணெய் மற்றும் உணவுத் துகள்கள் இயந்திரத்தைப் பழுதாக்கிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, பெரும்பாலான மக்கள் இதனை ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு வீடியோவாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, யாரும் தங்கள் வீடுகளில் இந்த ஆபத்தான சோதனையை முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
