“பக்கத்துவீட்டுக்காரன் தான் வேணும்” தினம் தினம் குடும்பத்துக்கே உலை வைத்த பெண்… விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி…!!

By Soundarya on ஆனி 10, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம்  பெலூர் தாலுகாவில் உள்ள கேரலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் சைத்ரா. 33 வயதான இவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகள், மாமியார், மாமனாரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது இவர் பக்கத்து வீட்டுக்காரரோடு கள்ள உறவில் இருந்தார். இதை அவருடைய குடும்பத்தார் எதிர்த்து உள்ளார்கள். இதனால் குடும்பத்தினரை தொந்தரவாக கருதி அவர்களுக்கு மெதுவாக விஷம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சைத்ரா-கஜேந்திரா தம்பதிக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் ஒருவரோடு கள்ள உறவில் இருந்துள்ளார் சைத்ரா. இந்த உறவு குடும்பத்தாருக்கு தெரிய வந்தபோது கணவர் சண்டையிட்டு வந்துள்ளார்.

ஆனால் சைத்ரா சமரசம் செய்து பிறகு மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் கஜேந்திராவுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உணவு விஷமாக மாறியதாக கூறியிருக்கிறார்கள். இதனால் தன்னுடைய மனைவியின் மீது சந்தேகம் அடைந்த அவர் வீட்டில் மனைவியின் பையில் இருந்த மாத்திரைகளை பற்றி சந்தேகப்பட்ட அவர் மருத்துவரிடம் காட்டிய போது அவை விஷ மாத்திரைகள் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார் கஜேந்திரா.

   

இதனை அடுத்து போலீஸ் விசாரணையில் சைத்ரா அந்த விஷ மாத்திரையை தினசரி உணவில் கலந்து கணவருக்கும், குழந்தைகளுக்கு, மாமியார் மற்றும் மாமனாருக்கு கொடுத்து வந்துள்ளது தெரியவந்தது. இதனால் அனைவருமே சீக்கிரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறார். இந்த விஷயத்தை உணர்ந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனைவரையும் சேர்த்துள்ளார். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சைத்ராவை காவல்துறையினர் கைது செய்ததுடன் கொலை முயற்சி மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்கிறார்கள்.