“நான் கடவுளுடன் சொர்க்கத்திற்கு போகிறேன்”… மூடநம்பிக்கையால் தற்கொலை செய்து கொண்ட பெண்… சிக்கிய கடிதம்..!!

By Nanthini on ஆவணி 3, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹிமாயத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தொழிலதிபர் அருண்குமார் ஜெயின் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பூஜா (43) என்ற மனைவி உள்ள நிலையில் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் ஐந்தாவது மாடியில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை அருண்குமார் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் பூஜா, அவருடைய பிள்ளைகள் மற்றும் வேலைக்கார பெண் இருந்துள்ளனர். பூஜா நீண்ட நேரம் தன்னுடைய அறையில் தனியாக இருந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் அரையிலிருந்து வெளியே வந்து தான் கடவுளிடம் செல்வதாக கூறியபடி ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தியதில் அப்போது அவருடைய அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், நாம் தொடர்ந்து கடவுளை பற்றி தியானித்து அவருக்கு நம்மை அர்ப்பணித்தால் நாம் கடவுளிடம் நெருக்கமாகி சொர்க்கத்தை அடைவோம் என்ற சமண குருக்களின் பொன் மொழியை எழுதி வைத்திருந்தார். மூடநம்பிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவர போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.