பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இப்படி வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் வரும். அந்த வகையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து வாதம் நடத்தப்பட்டது. அதில் பெண் ஒருவர் பகிர்ந்து கொண்ட செய்தி இணையவாசிகளை கவனம் ஈர்த்துள்ளது. அதாவது நான் திருமணம் செய்த புதிதில் என்னுடைய கணவர் வீட்டிற்கு ஆறு மணிக்கு வருவார் என்று தெரியாமல் நான் ஐந்து மணிக்கு கையில் மருதாணி போட்டுக் கொண்டேன்.
அவர் ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்ததும் என்னிடம் காபி போட்டு கேட்டார். நான் ஆசையாக அவரிடம் சென்று மருதாணியை காட்டினேன். இந்த அழகை பார்ப்பதற்கு தான் நான் ஆறு மணிக்கு வந்தேனா கழுவி விட்டு காபி போடு என்றார். அன்று தொடங்கி இன்று வரை 25 வருடங்களாக நான் மருதாணி போட மாட்டேன். அதிலும் குறிப்பாக என்னுடைய வளைகாப்பிற்கு கூட நான் மருதாணி போடவில்லை என்று கவலையோடு கூறுகிறார். இதை பார்த்த இணையவாசிகள் கணவன் சொன்ன ஒத்த வார்த்தைக்காக இப்படி ஒரு பெண் செய்வாரா? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…