அதிர்ச்சி சம்பவம்… சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட தகராறு… துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட 33 வயது பெண்… தப்பியோடிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

By Gayathri on கார்த்திகை 15, 2026

Spread the love

லோனி பார்டர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திராபுரி காலனி பகுதியில், சனிக்கிழமை நள்ளிரவில் வீட்டின் வெளிப்புறம் சிறுநீர் கழிப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த லோனி பார்டர் காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.