கடவுளாய் வந்த இளைஞர்… மனிதநேயம் இன்னும் சாகலங்க… வாயில்லா ஜீவனுக்காக ஒட்டுமொத்த டிராபிக்கையும் நிறுத்திய ஹீரோ…!!

By Gayathri on கார்த்திகை 15, 2026

Spread the love

பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையின் நடுவே, திடீரெனப் பூனை ஒன்று வழிதவறி வந்து சிக்கிக் கொண்டது. வேகமாக வரும் வாகனங்களுக்கு இடையே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அந்தப் பூனை, இன்னும் ஒரு நொடி தாமதித்திருந்தால் விபத்தில் சிக்கித் தன் உயிரையே இழந்திருக்கும். இதைக் கவனித்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், சற்றும் யோசிக்காமல் உடனடியாகத் தனது வாகனத்தைச் சாலையின் குறுக்கே நிறுத்தி, பின்னால் வந்த மற்ற வாகனங்களையும் கைகாட்டித் தடுத்து நிறுத்தினார்.

பின்னர், வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற அவர், பயத்தில் உறைந்திருந்த அந்தப் பூனையைப் பத்திரமாகத் தூக்கிச் சாலையோரத்தில் பாதுகாப்பாக விட்டார். வாகன ஓட்டியின் இந்தத் துரிதமான செயலால் ஒரு வாயில்லா ஜீவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மனிதநேயத்தை வெளிப்படுத்தும் இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.