ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பழங்குடிப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். அந்தப் பெண்ணின் புகாரின்படி, அவர் தனது மருமகனுடன் அங்குலின் செண்டிபாடா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பிற்பகல் 3 மணியளவில், பைக்கில் வீடு திரும்பும் போது, அந்தப் பெண்ணும் அவரது மருமகனும் ஒரு பெட்ரோல் பம்ப் அருகே வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பவும், சாப்பிடவும் நிறுத்தியுள்ளார்கள். வழியில், அந்தப் பெண் சிறுநீர் கழிக்க ஒரு காட்டுப் பகுதிக்குள் நுழைந்தபோது மூன்று ஆண்கள் ஒரு டிராக்டரில் வந்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பிறகு அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். குற்றம் நடந்த உடனேயே குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்தப் பெண் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், ஆகஸ்ட் 6 ஆம் தேதி, இரண்டு சிறார்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…