அடக்கொடுமையே…! காதலனுக்கு பிறந்த குழந்தை… திருட்டுத்தனமாக 6 லட்சத்திற்கு விற்ற காதலி… வெளியான ஷாக்கிங் வீடியோ…!!

By Soundarya on கார்த்திகை 22, 2025

Spread the love

தெலுங்கானாவின் கரீம்நகரில் இருந்து அதிர்ச்சியூட்டும் குழந்தை கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிறந்து ஏழு நாள் ஆன தனது ஆண் குழந்தையை ரூ.6 லட்சத்திற்கு விற்றதாகக் கூறப்படுகிறது. அதாவது அந்தப் பெண் முன்பு ஒரு ஆணுடன் உறவில் இருந்ததாகவும், அவருக்குத்தான் இந்த குழந்தை பிறந்தகாகவும் கூறப்படுகிறது.

பின்னர் காதலன் அப்பெண்ணை கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை பிறந்த பிறகு, குழந்தையைப் பராமரிக்கவும் வளர்க்கவும் தனக்கு நிதி வசதியும் வளமும் இல்லை என்று அந்தப் பெண் கூறி, குழந்தையை விற்க முடிவு செய்தார். குழந்தையுடன் அந்தப் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.