மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மல்லை சத்யா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஐந்து கோடி மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை பல வருடங்களுக்கு முன்பு வைகோ வாங்கினார். தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டி இருக்கிறார். அரண்மனை போன்ற வீடு குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்று ரகசியமாக புதுமனை புகுவிழா நடத்தி முடித்தார். வைகோவின் உறவினர் நடத்தும் மதுபான ஆலையால் வைகோ குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டுமே 250 கோடிக்கு வைவ குடும்பத்திற்கு சொத்து உள்ளது.
அதை வைத்து தான் இந்த வீட்டை அவர் கட்டினார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மல்லை சத்தியா பரபரப்பை கிளப்பி இருந்தார். இதனை மறுத்த வைகோ நான் நேர்மை நெருப்பு நாணயத்தின் கவசம் என்று மறுப்பு தெரிவித்தார். வைகோவின் இந்த மறுப்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ள நாஞ்சில் சம்பத், வைகோ நேர்மையின் நெருப்பும் கிடையாது நாணயத்தின் கவசமும் கிடையாது. 1998 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் உடன் கூட்டணி வைத்து அவருடைய ஆட்சியை 13 நாட்களில் ஜெயலலிதா கவிழ்த்து விட்டார். சுப்பிரமணியசாமியும் அந்த அம்மாவும் சேர்ந்து வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்து விட்டனர்.
அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அதை ஒருங்கிணைக்கிற பொறுப்பை அண்ணன் வைகோவிடம் தான் அடல் பிகாரி வாஜ்பாய் கொடுத்தார். அப்போது வைகோ அடித்ததே ஆயிரம் கோடி இருக்கும் என்று சொல்கின்றன. அப்போது என்னிடம் சொன்னார்கள். நமக்கு 2000 கோடி தான் பீஸ், அப்போது நமக்கு 2000 இருந்தால் போதும் என்ற மனம் தான். நான் அதை ஒரு ட்விட்டரில் கூட பகிர்ந்திருந்தேன். பண விஷயத்தில் எப்போதுமே வைகோ குறியாக இருப்பார். அவர் மீது மல்லை சத்யா சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் அனைத்துமே உண்மைதான் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது
