“அய்யோ… லிப்ட் திடீர் கோளாறு… மரண பயத்தில் கதறிய பெண்… காரியத்தில் இறங்கிய தீயணைப்பு படை…பதறவைக்கும் பின்னணி…!”

By Swetha on ஆடி 29, 2026

Spread the love

புனே மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பத்மாவதி உயர்நிலைப் பள்ளியில் எதிர்பாராத விதமாக மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவரைத் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கட்டிடத்திலுள்ள மின்தூக்கியைப் பயன்படுத்தியபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது பாதையிலேயே திடீரென நின்றுவிட்டது. இதனால் உள்ளே இருந்த பெண் வெளிவர முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டார். தகவல் அறிந்தவுடன், புனே தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

   

தீயணைப்புப் படையினர் மின்தூக்கியின் கதவுகளைப் பாதுகாப்பான முறையில் திறந்து, உள்ளே சிக்கியிருந்த பெண்ணை எவ்வித காயங்களுமின்றி மீட்டனர். இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், நகராட்சிப் பள்ளி கட்டிடங்களில் உள்ள மின்தூக்கிகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது