“வேலையை விட்டு தூக்கிட்டோம்”… திடீரென பெண்ணுக்கு வந்த இ-மெயில்… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… ஒட்டுமொத்த இணையத்தையும் அலறவிடும் பதிவு…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

பொதுவாகவே ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி நீக்கம் என்ற வார்த்தையை கேட்டால் ஊழியர்களுக்கு தூக்கம் போய்விடும். இதரிடையே 2025 டிசம்பரில் ஒரு பெண்ணுக்கு வந்த லே -ஆப் மெயில், அவரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர வைத்துள்ளது. இது தொடர்பாக சைமன் இங்காரி என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது மனைவிக்கு ஒரு பெரிய நிறுவனத்திடம் இருந்து திடீரென்று பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல் வந்ததை குறிப்பிட்டுள்ளார்.

அந்த மெயிலை பார்த்ததும் அவருடைய மனைவி ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய்விட்டார். நாம் ஏதாவது டெட்லைனை மிஸ் பண்ணிட்டோமா? இல்லை தெரியாமல் ஏதாவது பெரிய தப்பு செய்து விட்டோமா என்று பதறிப் போய் யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த ட்விஸ்ட் தெரிய வந்தது. உண்மையிலேயே அந்தப் பெண் தற்போது அந்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை. பல நாட்களுக்கு முன்பு அந்த வேலையை விட்டு அவர் விலகியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தின் மனிதவளத்துறை பழைய போட்டோக்களை வைத்து தவறுதலாக அவருக்கு அந்த மெயிலை அனுப்பியது தெரிய வந்தது.

   

தன்னுடைய மனைவி அடைந்த மன உளைச்சலை கண்டு டென்ஷன் ஆன கணவன் சைமன் அந்த நிறுவனத்தின் HR துறைக்கு ஒரு நக்கலான அட்வைஸ் வழங்கியுள்ளார். அன்புள்ள HRகளே, அடுத்த தடவை ஒரு மெய்யில் அனுப்பும்போது யாருக்கு அனுப்புகிறோம் என்று மெயில் ஐடியை கொஞ்சம் செக் பண்ணிட்டு அனுப்புங்க, பாவம் மனுசங்க என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.