பான் இந்தியா படங்கள் என்றாலே எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் விதமான கதையம்சத்தில் மிக பிரமாண்டமான படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் கான்செப்ட். ஆனால் அதை பிற மொழிகளில் இருக்கும் நட்சத்திர நடிகர்களை எல்லாம் ஒரே படத்தில் நடிக்க வைத்தால் அது பான் இந்தியா படம் என்ற தவறான புரிதலில் சினிமா இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் படங்களை உருவாக்கி ரசிகர்களுக்கு தருகின்றனர்.
அந்த வகையில் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் பிரமாண்டமான தமிழ் படங்களில் பிற மொழி நட்சத்திர நடிகர்களை கேமியோ ரோலில் நடிக்க வைக்கின்றனர். அந்த வகையில் ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியானது. ஆனால் ஜெயிலர் அடுத்து கூலி என 2 படங்களில் நடிக்க ஷாருக்கானை அழைத்தபோது அவர் நடிக்க மறுத்து விட்டார்.
ஆனால் 3வது முறையாக மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் நடிக்க அழைத்த போது ஏற்கனவே 2 முறை அழைத்து மறுத்து விட்டோம். இனியும் மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால் இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். நல்லவேளை கூலி படத்தில் அமீர்கான் கேரக்டரில் நடிக்க ஷாருக்கான் மறுத்து தப்பித்துவிட்டார் என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.
