உச்சகட்ட கொடூரம்… ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டிக்குள் 25 வயது பெண் அனுபவித்த சித்திரவதை… கத்தி முனையில் பலாத்காரம் செய்த நபர்…!

Spread the love

ஆந்திராவின் ராஜமுந்திரியிலிருந்து ஹைதராபாத்தில் புறநகரில் உள்ள பகுதிக்கு பயணித்த சாந்த்ரகாச்சி சிறப்பு எக்ஸ்பிரஸ் பெண்கள் பெட்டியில் 25 வயது பெண் ஒருவர் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரின் உடமைகள் சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குண்டூர் மற்றும் பெடகுரபாடு செல்லும் வழியில் ஓடும் ரயிலில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் வீட்டு வேலை செய்து வரும் பெண் சொந்த ஊருக்கு திரும்பும் போது இந்த கொடூரம் நடந்துள்ளது. அவர் பெண்கள் பெட்டியில் தனிமையில் அமர்ந்து கொண்டிருந்தபோது சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர் அந்த பெட்டிக்குள் நுழைந்துள்ளார். ஆனால் அப்போது அந்தப் பெண் இது பெண்கள் இருக்காங்க என்று கூறி அவரை தடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் ரயில் வேகமாக நகர்ந்ததால் அந்த நபர் உள்ளே நுழைவதை அந்த பெண்ணால் தடுக்க முடியவில்லை. அடையாளம் தெரியாத நபர் அந்த பெட்டிக்குள் நுழைந்ததும் கதவை உள்ளே இருந்து பூட்டி உள்ளார். பிறகு கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரிடமிருந்த பணம் மற்றும் அவருடைய செல்போனையும் திருடியதோடு மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் முகத்திலும் உடலிலும் மோசமான காயங்களை ஏற்படுத்தியுள்ளார். பிறகு குற்றவாளி ரயிலில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பிறகு சொந்த ஊருக்கு சென்ற அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். தற்போது ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

8 minutes ago

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

15 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

20 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

25 minutes ago

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

53 minutes ago