தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகரைச் சேர்ந்த 56 வயதான முத்துலட்சுமி என்ற பெண், தனது மகளைத் தனியாக வளர்த்து ஆளாக்கப் பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து எளிய முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஜூலை 15-ஆம் தேதி இரவு, தனது வீட்டின் முன்புற திண்ணையில் அவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் ஜூலை 18-ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, உயிரிழந்த முத்துலட்சுமியின் மகள் சத்யா மற்றும் உறவினர்கள் தென்பாகம் காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் சாதாரண மரணம் அல்ல, திட்டமிட்ட கொலை என்பதால் வழக்கை மாற்றியமைத்து குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலை வாங்கப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தனர். இதனிடையே, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மண்டை ஓட்டில் மூன்று ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தைக் கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படைப் போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரீகன் (37) என்பவரை அடையாளம் கண்டனர். விசாரணையில், பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ரீகன், சம்பவத்தன்று மதுபோதையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது தெரியவந்தது. அதிகாலை வேளையில் தனியாகப் படுத்திருந்த முத்துலட்சுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, இக்கொடூரச் செயலை வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் அவரது தலையில் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றதும் அம்பலமானது.
இதையடுத்துக் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி ரீகனைத் தனிப்படை போலீசார் விரைந்து கைது செய்தனர். குற்றவாளி கைதான தகவலைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக உடலை வாங்க மறுத்துப் போராடி வந்த குடும்பத்தினர் முத்துலட்சுமியின் உடலைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தனர். தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டியை வீட்டின் வாசலிலேயே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இச்சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பின்மை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…
சிங்கப்பூரில் உள்ள பிரபல மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் (45), 2022 ஆம் ஆண்டு தனது 14 வயது…
ஜெர்மனியில் 14 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 55 வயதான திருநங்கை காவல்துறை அதிகாரி ஒருவர்…
செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில்,…