அட கொடுமையே… ஆர்டர் போட்டா மன அழுத்தம் குறையுமாம்?…ஒரே நாளில் ரூ 258 கோடிக்கு ஸ்கேம் செய்த பெண்… அலறிய ஜப்பான் நிறுவனம்… அதிர்ச்சி பின்னணி…!

By Swetha on ஆவணி 9, 2026

Spread the love

ஜப்பானில் ஒன் பீஸ் போன்ற புகழ்பெற்ற அனிமே தொடர்களின் பொருட்களை ஆன்லைனில் போலி கணக்குகள் மூலம் ஆர்டர் செய்து, பின்னர் அவற்றை ரத்து செய்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய 32 வயதான மாயு யோஷிதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பதிப்பக நிறுவனமான ஷூயேஷாவின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் 238 போலி கணக்குகளைப் பயன்படுத்தி, சுமார் ரூ 258 கோடி மதிப்பிலான 2,000-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை இவர் செய்துள்ளார். கடைகளில் பணம் செலுத்தாமல் விடுவது, ‘கேஷ் ஆன் டெலிவரி’ பார்சல்களை வாங்க மறுப்பது மற்றும் போலி முகவரிகளைப் பயன்படுத்துவது போன்ற வழிகளில் பொருட்களைத் தொடர்ந்து ரத்து செய்துள்ளார். இதனால், டெலிவரி மற்றும் நிர்வாகச் செலவுகளால் அந்நிறுவனத்திற்கு நேரடியாக சுமார் ரூ 45 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணையில் மாயு யோஷிதா அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிமே கதாபாத்திரங்கள் மீது தனக்கு அதிக விருப்பம் இருந்ததாகவும், தனது அன்றாட வாழ்க்கையில் இருந்த கடுமையான மன அழுத்தத்தைக் குறைக்கவே இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொருட்கள் விற்றுத்தீர்வதற்குள் அவற்றை வெற்றிகரமாக ஆர்டர் செய்யும்போது தனக்குத் திருப்தியும் புத்துணர்ச்சியும் கிடைத்ததாகக் கூறிய அவர், நிறுவனத்தின் மீது தனிப்பட்ட வஞ்சம் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். 6 ஆண்டுகளாக இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வந்த இவர், அக்டோபர் 2023 முதலே இந்த போலி ஆர்டர் மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

   

யோஷிதாவின் இந்தத் தொடர் நடவடிக்கையால் உண்மையான அனிமே ரசிகர்கள் பொருட்களை வாங்க முடியாமல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர். வணிகத்திற்குத் தடை ஏற்படுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ள யோஷிதா, தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, நிறுவனத்தின் செயல்பாடுகளையும் ரசிகர்களையும் பாதித்த மாயு யோஷிதா மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஷூயேஷா நிறுவனம் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.