இங்க 2 பிள்ளைக்கே நாக்கு தள்ளுது.. 10வது முறை கர்ப்பமான பெண் .. மலையேறி சென்ற மருத்துவர்கள்.. !

By Nanthini on ஆடி 20, 2025

Spread the love

ஓசூர் அருகே கருச்சிதைவு ஏற்பட்டும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த மலை கிராம பெண்ணை மருத்துவ குழுவினர் தேடிச்சென்று சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போதைய சூழலில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவே பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் ஓசூர் அருகே கடமை குட்டை என்ற மலை கிராமத்தில் மல்லி என்ற 40 வயது பெண் 10வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்தும் வரவில்லை. அப்பகுதியில் மருத்துவ முகாமிட்ட மருத்துவர்கள் இது குறித்து தகவல் அறிந்து சுமார் 2 மணி நேரமாக அந்த பெண்ணை சிகிச்சைக்காக அழைத்தோம் அவர் வராமல் பிடிவாதம் செய்துள்ளார். பிறகு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் அந்த மலை கிராமத்திற்கு மலையேறி சென்று அந்தப் பெண்ணிடம் பேசி அவரை ஆம்புலன்ஸில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்த பெண்ணுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.